கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக, பிறப்பிக்கப்பட்ட இந்த பயணக் கட்டுப்பாடுகள், நாளை (17) அதிகாலை 4 மணியுடன் நிறைவடையவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
எனினும், நாளை (17) தொடக்கம் எதிர்வரும் 31 ஆம் திகதி வரையில், ஒவ்வொரு நாளும் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை, பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் உள்ள காலத்தில், பொதுமக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களில் ஈடுபடுகிறார்களா? என்பதை கண்காணிப்பதற்காக, கொழும்பு உட்பட நாட்டின் பலபகுதிகளில், இராணுவத்தினர் உந்துருளிகளில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அத்தோடு பொலிஸாரும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.