செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளை வாங்குவதற்கு முயற்சி!

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளை வாங்குவதற்கு முயற்சி!

0 minutes read

இரண்டாவது டோஸ் வழங்குவதற்காக தேவையான ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளைப் பாதுகாக்க கோரியதற்கு இலங்கைக்கு இங்கிலாந்திலிருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் பதிவாகும் அதிகளவிலான நோயாளிகள் மற்றும் இறப்புக் காரணமாக சீரம் நிறுவனத்தால் கோஷீல்ட் தடுப்பூசிகளை வழங்க முடியாத நிலையில் வேறு தரப்பிடம் இருந்து தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள திட்டமிடுவதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இந்நிலையில் ஒரு மில்லியன் டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசிகளை வழங்குவதற்காக இங்கிலாந்தில் இருந்து நேர்மறையான பதில் கிடைத்ததாகவும் தற்போது இரு அரசாங்கங்களுக்கிடையில் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அமெரிக்காவிலிருந்து தேவையான பங்குகளையும் கோரியுள்ளதாகவும் மேலும் கோஷீல்ட்டின் முதல் டோஸைப் பெற்றவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசி போடுவதற்கான பங்குகளை பெற்றுக்கொள்ள முடிந்தவரை பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.

அந்தந்த நாடுகளின் முகவர்களுடன் கலந்துரையாடுவதோடு மட்டுமல்லாமல், திறந்த சந்தைகளில் தேவையான தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளவும் அரசாங்கம் முயற்சி எடுத்துவருவதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.