செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை காரைநகரில் கடும் காற்றினால் 25 பேர் பாதிப்பு!

காரைநகரில் கடும் காற்றினால் 25 பேர் பாதிப்பு!

1 minutes read

யாழ்ப்பாணம்- காரைநகரில் கடும் காற்றினால் 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு பிரதிப் பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்துள்ளார்.

காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள 7 குடும்பங்களைச் சேர்ந்த 25 பேரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதுடன் 4 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறித்த கடும் காற்றினால் ஒருவர் காயமடைந்துள்ளார். சுய தொழில் முயற்சியாளர் ஒருவரின் கோழி கூடும் தூக்கி வீசப்பட்டுள்ளதாக சூரியராஜ் கூறியுள்ளார்.

அத்துடன் கடும் காற்றினால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் சேகரிக்கப்பட்டு, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More