Thursday, April 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தடுப்பூசி வேலை திட்டத்தின் மற்றுமொரு கட்டம்!

தடுப்பூசி வேலை திட்டத்தின் மற்றுமொரு கட்டம்!

1 minutes read

நாட்டின் மொத்த சனத் தொகையில் 65 சதவீதமான மக்களுக்கு கொவிட் தடுப்பு ஊசியை ஏற்றுவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

ஏற்கனவே 10 சதவீதமான மக்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. கொவிட் தடுப்பு ஊசி ஏற்றும் வேலைத்திட்டத்தின் மற்றுமொரு கட்டம் இன்று ( செவ்வாய்க்கிழமை ) ஆரம்பிக்கப்படவிருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை 12 மாவட்டங்களில் முன்னெடுக்கப்படவுள்ளதோடு மேல் மாகாணம் உட்பட 9 மாவட்டங்களில் தடுப்பூசி ஏற்றம் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுவரை சுமார் 23 இலட்சம் பேருக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றியுள்ளதோடு மூன்று லட்சத்து ஐம்பத்து மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் 2 தடுப்பூசிகளையும் செலுத்தியுள்ளமை குறிப்பிடதக்கது .

சீனாவில் இருந்து தருவிக்கப்பட்ட உள்ள 10 லட்சம் சைனோ பார்ம் தடுப்பூசிகளில் இருந்து 8 மாவட்டங்களுக்கு 25,000 தடுப்பூசிகள் வீதம் பகிர்ந்தளிக்கப்படும். நுவரெலியா ஹம்பாந்தோட்டை அனுராதபுரம் பதுளை மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு தலா 50,000 தடுப்பூசிகளை பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More