செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி விடு விக்கப்படுகிறது!

யாழில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி விடு விக்கப்படுகிறது!

0 minutes read

யாழ்ப்பாணம், நல்லூர் அரசடிப் பகுதி, தனிமைப்படுத்தலில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை விடுவிக்கப்படுவதாக மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “அண்மையில் நல்லூர் அரசடியில், கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகளவு அடையாளம் காணப்பட்டனர்.

இதனால் கடந்த மே 28ஆம் திகதி அப்பகுதி முடக்கப்பட்டு, மக்களும் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படாதமையினால் இன்று காலை முதல் அரசடிப் பகுதி விடுவிகப்படுகின்றது.

இதேவேளை சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட சாவற்காடு கிராமம் முடக்கப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.