செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு நஸ்டஈடு வழங்குவது தொடர்பில் ஆலோசனை!

பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு நஸ்டஈடு வழங்குவது தொடர்பில் ஆலோசனை!

0 minutes read

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கான முதற்கட்ட நஸ்ட ஈட்டினை வழங்கும் செயற்பாடுகள் தொடர்பான ஆலோசனைகளை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார்.

கடற்றொழில் அமைச்சின் செயலாளர், கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், மற்றும் துறைசார் பணிப்பாளர்களுடனான மீளாய்வுக் கலந்துரையாடலின் போதே மேற்குறித்த விடயம் ஆராயப்பட்டுள்ளது.

கடற்றொழில் அமைச்சில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலில், நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் களப்பு அபிவிருத்தி, வி.எம்.எஸ் கருவிகளைப் பொருத்துவதற்கான முதற்கட்டப் பயனாளர் தெரிவு உட்பட அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத் திடடங்கள் தொடர்பாக கேட்டறிந்த கடற்றொழில் அமைச்சர் வேலைத் திட்டங்களை விரைவுபடுத்துவதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More