March 26, 2023 9:12 am

ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலம் மீண்டும் நாடாளுமன்றில்!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலம் நாடாளுமன்றில் மீண்டும் முன்வைக்கப்படும் என தான் எதிர்பார்ப்பதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இன்று (சனிக்கிழமை) இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், அமைச்சரவை குழு கோரியதை அடுத்து குறித்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என கூறினார்.

ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் தனியார் பல்கலைக்கழகமாக அல்லாமல் அரசுக்கு சொந்தமான நிறுவனமாக வகைப்படுத்தப்பட்டது என்றும் அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.

ஆகவே நிறுவனத்திற்குள் இயற்றப்பட்ட சில சட்டங்கள் ஒரே சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் இதற்கு தேவையான திருத்தங்கள் செய்யப்பட்ட பின்னர் மீண்டும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் கூறினார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்