March 26, 2023 10:03 am

இலங்கையில் கொரோனாவால் மேலும் 46 உயிரிழப்புகள் பதிவு!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆண்கள் 30 பேரும் பெண்கள் 16 பேருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 779ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் ஆயிரத்து 420 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 84 ஆயிரத்து 932 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 2 இலட்சத்து 56 ஆயிரத்து 676 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 24 ஆயிரத்து 477 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்