Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் எரிவாயு சிலிண்டரின் அதிகபட்ச சில்லறை விலை தொடர்பான அறிவிப்பு!

இலங்கையில் எரிவாயு சிலிண்டரின் அதிகபட்ச சில்லறை விலை தொடர்பான அறிவிப்பு!

1 minutes read

அதன்படி, எல்.பி.ஜி 18 லிட்டர் அல்லது 9.6 கிலோ உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் அதிகபட்ச சில்லறை விலை ஆயிரத்து 150 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் விலைகளை மாவட்ட அளவில் மாற்றலாம் எனவும் அதன்படி, களுத்துறை மாவட்டத்தில் ஒரு எரிவாயு சிலிண்டரின் அதிகபட்ச சில்லறை விலை ஆயிரத்து 158 எனவும் காலி மாவட்டத்தில் ஆயிரத்து 181 எனவும் வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் அதிகபட்ச சில்லறை விலையான ஆயிரத்து 259 ரூபாய் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, அதிகபட்ச சில்லறை விலை நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை குறித்த வர்த்தமானி அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த அறிவிப்புக்கு அமைய எரிவாயு சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படாத நிலையங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More