செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் தனிமைப்படுத்தல் தொடர்பான புதிய வழிகாட்டுதல்கள்!

இலங்கையில் தனிமைப்படுத்தல் தொடர்பான புதிய வழிகாட்டுதல்கள்!

1 minutes read

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் ஒப்பத்துடன், புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதற்கமைய முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட ஒருவர், கொரோனா தொற்றுடன் தொடர்புடையவராக இருந்தாலும், எந்த அறிகுறிகளையும் காட்டாத பட்சத்தில், அவர் தனிமைப்படுத்தலின்றி தங்கள் கடமைகளைச் செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும், கொரோனா தொற்றுடன் தொடர்புடைய நபருக்கு அறிகுறிகள் தென்பட்டால், அவர் உடனடியாக அன்டிஜென் அல்லது பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் நபர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் தனிமைப்படுத்தல் முறையிலும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பல திருத்தங்களை வெளியிட்டுள்ளார்.

இதற்கமைய வெளியிடப்பட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களின்படி, கொரோனா தொற்றுக்கு எதிரான ஒரு தடுப்பூசியைப் பெற்ற கடந்த ஆறு மாதங்களில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகள் அல்லது இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களாக கருதப்படுகிறது.

மேலும், நாட்டிற்கு வந்தவுடன் விமான நிலையத்தில் நடத்தப்படும் பிசிஆர் பரிசோதனையின்போது 30க்கும் குறைவான CT பரிசோதனை முடிவுகளைக் கொண்ட சுற்றுலாப் பயணிகள் மற்றும் இலங்கையர்கள் 7 நாட்கள் சுய தனிமைப்படுத்தப்பட்ட காலத்திற்கு இணங்கி விமான நிலையத்தை விட்டு வெளியேற முடியும்.

மேற்படி பெறுபேறுகளை கொண்டவர்களின் வீட்டில் தனிமைப்படுத்தத் தேவையான அனைத்து வசதிகளும் இருந்தால் மட்டுமே அவர்கள் விமான நிலையத்திலிருந்து விடுவிக்கப்படுவார்கள்.

மேலும், முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பெற்றோருடன் வரும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கொரோனா பரிசோதனையில் இருந்து முற்றிலும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 12 முதல் 18 வயதுக்குட்பட்ட ஒரே ஒரு தடுப்பூசி போட்ட குழந்தைகளுக்கும் தங்கள் பெற்றோருடன் நாட்டிற்குள் பிரவேசிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதிக ஆபத்துள்ள நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் காலம் 7 ​​முதல் 14 நாட்கள் வரை மாறுபடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.