செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தெற்கு அதிவேக வீதியில் விபத்து – இருவர் உயிரிழப்பு!

தெற்கு அதிவேக வீதியில் விபத்து – இருவர் உயிரிழப்பு!

0 minutes read

தெற்கு அதிவேக வீதியின் கடவத்தை – கடுவலை 16 ஆம் தூண் பகுதியில் இன்று(சனிக்கிழமை) இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

அதிவேக வீதியில் பயணித்த லொறியின் டயர்கள் பழுதடைந்துள்ளதால் அதனை திருத்துவதற்காக வீதியோரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

இதன்போது வீதியால் பயணித்த மற்றுமொரு லொறி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் லொறியின் சாரதி தூக்கி எறியப்பட்டு வீதியில் விழுந்துள்ள நிலையில் லொறியின் இடது இருக்கையில் அமர்ந்திருந்த லொறியின் உரிமையாளர் லொறி தீப்பற்றி எரிந்ததில் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியின் சாரதியும் உதவியாளரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.