இலங்கை மருந்துகள் குறித்த அமைச்சரவை அங்கீகாரம்!

உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகள், சத்திர சிகிச்சை உபகரணங்கள் மற்றும் மருத்துவ ஆய்வுகூடப் பயன்பாட்டுப் பொருட்களை கொள்வனவு செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சர்வதேச தரத்திற்கமைய எமது நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய அனைத்துவித மருந்துகள், சத்திர சிகிச்சை உபகரணங்கள் மற்றும் மருத்துவ ஆய்வுகூடப் பயன்பாட்டுப் பொருட்களின் உற்பத்திகளை மேற்கொள்வது அரசாங்கத்தின் கொள்கையாகும்.

அதற்கமைய, குறித்த பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வெளிப்படையானதும் வினைத் திறனானதுமான பொறிமுறையை அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அப்பொறிமுறைக்கமைய எதிர்வரும் காலங்களில் உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் குறித்த பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காகவும், சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஆசிரியர்