இலங்கையில் பரசிட்டமோலின் கேள்வி 3 மடங்காக அதிகரிப்பு!

கடந்த மூன்று வாரங்களில் பரசிட்டமோல் மாத்திரைகளுக்கான தேவை சுமார் 3 மடங்காக (275% வீதத்தால்) அதிகரித்துள்ளதாக ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்தார், இலங்கையில் ஒமிக்ரோன், டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கு இந்த மாத்திரைகள் பயன்படுத்தப்படுவதால், பரசிட்டமோலுக்கு அதிக கேள்வி ஏற்பட்டள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

உலக சந்தையில் பராசிட்டமோல் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலை அதிகரித்து வருவதால், பெரும்பாலான நிறுவனங்கள் அவற்றை இறக்குமதி செய்யாமதிருக்க முயற்சிப்பதாகவும், அதனால் உள்ளூர் சந்தையில் பரசிட்டமோல் மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதனால், உச்சபட்ச அளவில் தேவையான அளவு பரசிட்டமோல் மாத்திரைகளை உற்பத்தி செய்ய, அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் (SPC) நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய, குறித்த தேவையை பூர்த்தி செய்வதற்காக சுமார் 3.2 மில்லியன் பரசிட்டமோல் மாத்திரைகள் தயாரிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

ஆசிரியர்