பல வாரங்களுக்கு முன்னர் பம்பலப்பிட்டி, கொள்ளுப்பிட்டி மற்றும் காலி முகத்திடல் கடற்பரப்பில் பதிவாகிய தொடர் முதலை சம்பவங்களைத் தொடர்ந்து இந்த காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
இருப்பினும், கடற்கரையில் முன்பு பார்த்த முதலைகளைவிட இந்த விலங்கு பெரியதென தெரிவிக்கப்படுகிறது.
இதனால் மீண்டும் தமது செயற்பாடுகள் பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக கரையோரப் பகுதியுடன் தொடர்புடைய மீனவர்களும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
பம்பலப்பிட்டி, கொள்ளுப்பிட்டி மற்றும் தெஹிவளை – கல்கிஸ்ஸ பிரதேசங்களைச் சேர்ந்த மீனவர்கள் தொழில்துறைக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தி வரும் இந்த முதலை அச்சுறுத்தலை இல்லாதொழிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கடந்த காலங்களில் குறித்த பிரதேசத்தின் கரையோரங்களில் காணப்பட்ட முதலைகள் கொழும்பு நகரில் உள்ள கால்வாய்கள் ஊடாக கடலுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
எனினும் இந்த விலங்குகள் கடலுக்கு இடம் பெயர்வதை தடுக்க இதுவரை தெளிவான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.