June 7, 2023 6:20 am

ஐந்து கால்களுடன் விசித்திர கன்றுக்குட்டி!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

வவுனியா குஞ்சுக்குளம் கிராமத்தில் ஐந்து கால்களுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி!

வவுனியா பாலமோட்டை கோவில் குஞ்சுக்குளம் கிராமத்தில் ஒரு மாட்டின் கன்றுக்குட்டி ஐந்து கால்களுடன் பிறந்துள்ளது.
கிராமத்தில் ஆறுமுகம் ஞனேஸ்வரன் என்பவர் மாடுகளை வளர்த்து வரும் நிலையில், அவரது பட்டியிலேயே இக் கன்று பிறந்துள்ளது.

கன்று தற்போது ஆரோக்கியமாக இருப்பதாகவும் அதற்கு எவ்வித பாதிப்பும் இல்லை எனவும் கன்றினை பார்வையிட்டு பரிசோதனை செய்த மருத்துவ கால்நடை வைத்தியர் தெரிவித்துள்ளார்.

இதன் போது கிராம மக்கள் சென்று அதிசய கன்று குட்டியை பார்வையிட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்