December 2, 2023 9:26 pm

ஆண் நண்பனுடன் தங்காலை கடலில் குளித்த போலந்து யுவதி பலி

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

தங்காலைக் கடலில் தனது ஆண் நண்பனுடன் கடலில் குளித்த போலந்து நாட்டு யுவதியொருவர் அலையில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இரு போலந்து பிரஜைகளும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) மாலை தங்காலை கடலில் குளிக்க சென்ற வேளை பலத்த கடல் அலைகளால் அவர்கள் இருவரும் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

பின்னர் இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு தங்காலை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில், கடல் அலையில் சிக்கி 22 வயதுடைய போலந்து யுவதி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்