December 2, 2023 6:27 pm

வாழைச்சேனை ஓட்டமாவடி பகுதியில் மனைவியின் கழுத்தை அறுத்த கணவன் கைது

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி – 1 அல் முக்தார் வீதியில்  பெண்ணொருவர் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை (27)  இடம்பெற்றுள்ளது.

கணவனும், மனைவியும் வீடொன்றில் வசித்து வந்த நிலையில் இருவருக்குமிடையில் ஏற்பட்ட முரண்பாடே இச் சம்பவத்துக்கு காரணம் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

குறித்த பெண்ணை குளியலறையில் வைத்து கணவன் கத்தியால் கழுத்தையும், கையையும் வெட்டிய போது பலத்த காயங்களுக்குள்ளான பெண் தன் உயிரை காப்பாற்றிக் கொள்ள கூக்குரலிட்ட போது அயலவர்கள் சென்று பெண்ணை காப்பாற்றி மீட்டுள்ளனர்.

57 வயது மதிக்கத்தக்க குறித்த பெண் பலத்த காயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியைசாலையில் அனுமதிக்கப்பட்டு  உடனடியாக மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் தாக்குதல் நடாத்திய கணவன் வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்