December 3, 2023 10:24 am

மாத்தறை மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மாத்தறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை (09) மற்றும் செவ்வாய்கிழமை (10) ஆகிய தினங்கள் மூடப்படும் என மாத்தறை வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மாத்தறை மாவட்டத்தில் நிலவும் கடும் மழை மற்றும் வெள்ளம் என்பவற்றை கருத்திற் கொண்டு இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் தென் மாகாண ஆளுநர் விலி கமகே ஆகியோரின்  தலைமையில் மாத்தறை மாவட்ட இடர் முகாமைத்துவ குழுக் கூட்டம் இன்று சனிக்கிழமை (07) மாத்தறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளபோதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்