December 10, 2023 4:49 pm

314 அதிகாரிகளுக்கும் 1565 இராணுவவீரர்களுக்கும் பதவி உயர்வு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

இலங்கை இராணுவத்தின் 74 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 314 அதிகாரிகள் மற்றும் 1565  இராணுவ சிப்பாய்கள் அவர்களின் அடுத்த தரத்துக்கு  பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

இராணுவத்தின் 74 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே பரிந்துரையின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவுக்கு அமைய   இலங்கை இராணுவத்தின் நிரந்தர மற்றும் தொண்டர் படையணிகளைச் சேர்ந்த 314 அதிகாரிகள் மற்றும் 1565 சிப்பாய்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதுடன் இந்த நிகழ்வு பனாகொடை இராணுவ முகாமில் இன்று செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்றது.

பிரிகேடியர் நிலையிலிருந்த 07 அதிகாரிகள் மேஜர் ஜெனரல் நிலைக்கும், 12 கேணல்கள் பிரிகேடியர் நிலைக்கும், 37 லெப்டினன் கேணல்கள் நிலைக்கும், 41 மேஜர்கள் லெப்டினன் கேணல் நிலைக்கும், 50 கேப்டன்கள் மேஜர் நிலைக்கும், 84 லெப்டினன்கள் கேப்டன் நிலைக்கும் மற்றும் 83 இரண்டாம் லெப்டினன்கள் லெப்டினட் நிலைக்கும் (நிரந்தர மற்றும் தொண்டர் படைகளின்) அதிகாரிகள் பிரிவில் இவ்வாறு நிலை உயர்வு பெற்றுள்ளனர்.

மேலும் 83 அதிகாரவாணையற்ற அதிகாரிகள் இரண்டாம் நிலைக்கும், அதிகாரவாணையற்ற அதிகாரிகள் முதலாம் நிலைக்கும், 183 பணிநிலை சார்ஜன்கள் அதிகாரவாணையற்ற அதிகாரிகள் இரண்டாம் நிலைக்கும், 203 சார்ஜன்கள் பணிநிலை சார்ஜன் நிலைக்கும்,414 கோப்ரல்கள் சார்ஜன் நிலைக்கும், 374 லான்ஸ் கோப்ரல்கள் கோப்ரல் நிலைக்கும் மற்றும் 248 சிப்பாய்கள் லான்ஸ் கோப்ரல் நிலைக்கும் நிரந்தர மற்றும் தொண்டர் படையணிகளில் நிலை உயர்வு பெற்றுள்ளனர். இதேவேளை 07 பிரிகேடியர்கள் இராணுவத்தின் இரண்டு நட்சத்திர மேஜர் ஜெனரல் நிலைக்கு நிலை உயர்வு பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

 

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்