November 28, 2023 6:49 pm

அமைச்சர்களான ஹரீன், மனுஷ ஆகியோரின் மனுக்கள் விசாரணைக்கு!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

தமது கட்சி உறுப்புரிமையை இரத்துச் செய்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி மேற்கொண்ட  தீர்மானத்தை இரத்துச் செய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி அமைச்சர்களான ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர்  தாக்கல் செய்த  மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மனுக்கள் இன்று செவ்வாய்க்கிழமை (10) உயர்  நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா, நீதிமன்றத்தில் ஆஜராகி, மனு தொடர்பான எதிர் ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்கு ஒத்திவைக்குமாறு கோரினார்.

அரசியலமைப்புச் சட்டத்தின்படி, இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து இரண்டு மாதங்களுக்குள் உச்ச நீதிமன்றம் மனுக்களின் விசாரணையை முடிக்க வேண்டும் என்று பிரதிவாதி தரப்பு சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் அமர்வு, இந்த மனுக்கள் தொடர்பான ஆட்சேபனைகள் இருந்தால் இன்றே தாக்கல் செய்யுமாறு மனுதாரர்களின் வழக்கறிஞர்களுக்கு உத்தரவிட்டது.

இந்த மனு மீதான விசாரணை எதிர்வரும் 12ஆம் திகதி  இடம்பெறவுள்ளது.

 

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்