December 10, 2023 8:20 pm

13 மாவட்டங்களில் கடும் இடியுடன் கூடிய மழை பெய்யும்!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

நாட்டின் 13 மாவட்டங்களில் இன்று புதன்கிழமை (11) இரவு 11.30 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்யும் ஏற்படக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் பதுளை, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் கடுமையான இடி, மின்னலுடன் கூடிய  கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்  வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் பொதுமக்கள் பின்வரும் அறிவுரைகளைப் பின்பற்றுமாறு வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களம் ஆலோசனை வழங்குகின்றது.

• திறந்தவெளிகளில் நடமாடுவதை குறைத்துக் கொள்ளவும். மரங்களின் கீழ் ஒருபோதும் நிற்க வேண்டாம்.

• இடி முழக்கத்தின் போது நெல்வயல்கள், தேயிலைத் தோட்டங்கள், திறந்த நீர்நிலைகள் போன்றவற்றைத் தவிர்த்துக் கொள்ளவும்.

• இடி முழக்கத்தின் போது கம்பித்தொடர்புள்ள தொலைபேசி மற்றும் மின்னிணைப்பிலுள்ள மின் உபகரணங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ளவும்.

• துவிச்சக்கர வண்டிகள், உழவியந்திரங்கள், படகுகள் போன்ற திறந்த வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ளவும்.

• விழக்கூடிய மற்றும் விழுந்த மரங்கள், மின்கம்பிகள் குறித்து அவதானமாக இருக்கவும்.

• அவசர உதவிகளுக்கு உங்கள் பிரதேச அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளவும்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்