Monday, May 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பிற்பகலில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்

பிற்பகலில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்

1 minutes read

மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஷ்ட  வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார்.

வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில்,

சப்ரகமுவ மற்றும் ஊவா  மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி, நுவரேலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும்  50 மில்லிமீற்றரிலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

கிழக்கு  மாகாணத்திலும் அத்துடன் பொலநறுவை  மாவட்டத்திலும் இரவு வேளையில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை  பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ, மேல்,வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பாடு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

நாட்டை சூழ உள்ள கடல்  பிராந்தியங்களின் பல இடங்களில் குறிப்பாக பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 – 30 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து அல்லது  மாறுபட்ட திசைகளில் இருந்து  காற்று வீசும்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும்.

ஆனால்  இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் எனத் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More