செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழ். கோப்பாயில் தோட்டக் கிணற்றில் இருந்து இளைஞனின் சடலம் மீட்பு!

யாழ். கோப்பாயில் தோட்டக் கிணற்றில் இருந்து இளைஞனின் சடலம் மீட்பு!

0 minutes read

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, கோப்பாய் மத்தி பகுதியில் உள்ள தோட்டக்கிணறு ஒன்றில் இருந்து இளைஞர் ஒருவரது சடலம் நேற்று வெள்ளிக்கிழமை (15) மீட்கப்பட்டது. கோப்பாய் மத்தி பகுதியைச் சேர்ந்த கதிர்காமநாதன் நிரோசன் (வயது 29) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த இளைஞன் கடந்த 13 ஆம் திகதி 4 மணியளவில் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார். இந்நிலையில், குறித்த இளைஞனை உறவினர்கள் தேடி வந்த நிலையில் தோட்டக் கிணற்றில் இருந்து அவரது சடலம் மீட்கப்பட்டது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More