செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பாடசாலை மாணவி கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் | மூவருக்கு விளக்கமறியல்

பாடசாலை மாணவி கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் | மூவருக்கு விளக்கமறியல்

1 minutes read

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி பகுதியில் 15 வயது பாடசாலை மாணவியை கூட்டுப்பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின்  பேரில் கைது செய்யப்பட்ட மூவரையும் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.ஹம்ஸா உத்தரவிட்டுள்ளார்.

சம்பவதினமான சனிக்கிழமை (06) 15 வயதும் 7 மாதங்களும் கொண்ட சிறுமியை 26 வயதுடைய நபரொருவர் வீடு ஒன்றிற்கு வரவழைத்துள்ளார். பின்னர், குறித்த நபரின் நண்பர்கள் இருவர் உட்பட 3 பேர் சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.

இதனையடுத்து, சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமி அவரது பெற்றோருக்கு தெரியப்படுத்தியுள்ளார். பின்னர், பொலிஸில் சிறுமியின் தந்தையால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய  சந்தேகநபர்கள்  நேற்றுமுன்தினம் (07) கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் 26 மற்றும் 32 வயதுக்கிடைப்பட்ட மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்,  சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

அன்றையதினம் சந்தேக நபர்களை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.