செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை விரைவில் இலங்கை வருகிறார் சாந்தன்

விரைவில் இலங்கை வருகிறார் சாந்தன்

1 minutes read

இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை தொடர்பில் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலையான நிலையில் தொடர்ந்தும் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சாந்தனை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கான உத்தரவு ஒரு வாரகாலத்தில் வெளியாகும் என இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தாயாரை கவனித்துக்கொள்வதற்காக தன்னை விடுதலை செய்யக்கோரி சாந்தன் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (13) விசாரணைக்கு வந்தவேளை மத்திய அரசின் சார்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணையின் போது சாந்தன் இலங்கை திரும்புவதற்கான தற்காலிக பயண ஆவணத்தை இலங்கை துணைத் தூதரகம் அனுப்பியுள்ளதாக குறிப்பிடப்பட்டது.

தமிழக அரசாங்கம்

இலங்கை அரசாங்கம் அனுப்பிய ஆவணங்கள் மத்திய அரசாங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சாந்தனுக்கான உத்தரவு! இந்திய மத்திய அரசின் புதிய அறிவிப்பு | Repatriation Of Shantan To Sl By India Central Gov

 

இதேவேளை தமிழக அரசாங்கம் அனுப்பிய ஆவணம் இன்னமும் மத்திய அரசாங்கத்திற்கு கிடைக்கவில்லை.

இந்நிலையில் சாந்தனை இலங்கைக்கு அனுப்புவதற்கான உத்தரவு ஒரு வாரத்தில் பிறப்பிக்கப்படும் என மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.