செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மரக்கறிகளின் விலை குறைந்த போதிலும் முட்டை விலை அதிகரிப்பு

மரக்கறிகளின் விலை குறைந்த போதிலும் முட்டை விலை அதிகரிப்பு

0 minutes read

மரக்கறிகளின் விலை குறைந்துள்ள போதிலும் முட்டை ஒன்றின் சில்லறை விலை 70 ரூபாவாக அதிகரித்துள்ளதாகச் சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று  ஞாயிற்றுக்கிழமை (18) வியாபார நிலையங்களின் விற்கப்பட்ட மரக்கறிகளின் விலைகளின்படி , கடந்த காலங்களில் 3 ஆயிரம் ரூபாயாக இருந்த ஒரு கிலோ கெரட் 500 ரூபாவாகவும், போஞ்சி கிலோ 550 ரூபாவாகவும், கோவா 300 ரூபாவாகவும் , வெண்டைக்காய் 200 ரூபாவாகவும் , கத்தரிக்காய் 150 ரூபாவாகவும், வெங்காயம் 110 ரூபாவாகவும்  முள்ளங்கி, நோகோல், வாழைக்காய் என்பவற்றின் விலைகள்  50  ரூபாவினாலும் குறைவடைந்துள்ளது.

பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் அதிகளவில் மரக்கறிகள் வரவழைக்கப்படுவதாகவும், வியாபாரிகளின் வருகையும் குறைந்துள்ளதாகவும் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More