செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மட்டக்களப்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுககள் நீதிகோரி போராட்டம்

மட்டக்களப்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுககள் நீதிகோரி போராட்டம்

3 minutes read

மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் நீதிகோரி போராட்டமொன்று இன்று திங்கட்கிழமை (24)  காலை காந்தி பூங்கா முன்பாக இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி தலைமையில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள் பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தனர்.

காணாமல் போனவர்களின் குடும்பங்களை மிரட்டுவதையும் அச்சுறுத்துவதையும் நிறுத்துங்கள், கொலைகாரனால் நீதி வழங்க முடியுமா??, பிள்ளைகளை தினம் தேடிக் கொண்டே நீதி இன்றியே இறந்து கொண்டிருக்கின்றோம், நாங்கள் கேட்பது இழப்பீட்டையோ மரணச் சான்றிதழையோ அல்ல முறையான நீதி விசாரணையே, போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது சர்வதேச சமூகத்திற்கு கொண்டுசெல்லும் வகையிலான கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் இங்கு சங்க செயலாளரினால் வாசிக்கப்பட்டது.

சுமார் 100 க்கு மேற்பட்ட காணமல்ஆக்கப்பட்டவர்களின் கலந்து கொண்டதுடன் ஒரு மணி நேரம் இவ்வார்ப்பாட்டம் இடம் பெற்றது.

ஒவ்வொரு மாதமும் 24ஆம் திகதி தமது உறவுகளுக்கு நீதிகோரிய போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அமலநாயகி,

கடந்த கால தொடர் போராட்டங்கள் மூலமாக சர்வதேசத்தினுடைய பார்வை எமது பக்கம் திரும்ப பட்டிருக்கின்றது எங்களுடைய மக்களுக்கான நீதி விசாரணை வேண்டும் என்பதனை அழுத்தமாக சர்வதேச நாடுகள் அறிக்கைகளின் ஊடாக வெளிப்படுத்தி இருந்தாலும் எங்களுடைய தொடர் போராட்டங்கள் எங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது அதற்கான பொறுப்பு கூற வேண்டிய அவசியம் எமது உறவுகள் நமக்கு கிடைக்க வேண்டும்

அல்லது அவர்களுக்கு என்ன நடந்தது என்கின்ற விடயங்களை சர்வதேசத்தின் ஊடாக நாங்கள் கொடுத்த பாரிய போராட்டங்கள் ஊடாக சர்வதேச பார்வை திரும்பப் பெற்ற நிலையில் எமது வடக்கு கிழக்கு உள்ள 8 மாவட்டங்கள் இணைந்து 23 ஆம் திகதி தொடக்கம் 30-ம் தேதி வரை ஒவ்வொரு மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் இந்தப் போராட்டங்கள் இடம்பெறும்.

நாளைய தினம் கிளிச்சி மாவட்டத்தில் தொடர் போராட்டம் இடம்பெற இருக்கின்றது இவ்வாறு மாறி மாறி வடக்கிலும் கிழக்கிலும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளில் உறவினர்களால் இந்த கவன ஈர்ப்பு போராட்டங்கள் எங்களுடைய உறவுகளுக்கு நீதி கிடைக்கும் வரைக்கும் இந்த போராட்டங்கள் தொடர்ந்த வண்ணம் காணப்படும்.

இந்த சந்தர்ப்பத்தில் எங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது இனிமேல் இந்த ஆற்கடத்தல்கள் அத்தோடு எங்களுக்கு நடந்த நிலைமைகள் இவருக்கும் நடக்கக்கூடாது என்பதற்காகவும் இவ்வாறான பதினைந்து வருடங்கள் கடந்த நிலையில் நாங்கள் தொடர்ச்சியாக போராடிக் கொண்டு வருகின்றோம்.

2017 ஆம் ஆண்டு தொடக்கம் தனித்துவமாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் இந்த போராட்டங்களை வடக்கு கிழக்கு இணைந்து செயல்பட்டு இந்த போராட்டங்களை செய்து வருகின்றதன் பிரதிபலனாக இன்று சர்வதேசத்தின் பார்வை எங்கள் பக்கம் ஈர்க்கப்பட்டு இருக்கின்றது.

இலங்கை அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தையும் கொண்டு வந்து அவர்களுக்கான நாட்ட ஈடுகளை வழங்குகின்றோம் எனக் கூறி மக்களை பெருமளவு ஏமாற்றி அந்த கோப்புக்களை முடிவுறுத்தி விடுவதற்கான செயல்பாடுகளை சரியாக கள்ளத்தனமான வேலைகளை காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தினால் முன்னெடுத்துக் கொண்டு வருகின்றனர்.

உண்மையில் நான் அந்த அலுவலகத்திற்குச் சென்று பதிவு செய்யவில்லை ஆனால் எங்கேயோ இருந்து எங்களுடைய தரவுகளை எடுத்துக் கொண்டு தங்களுக்கு எங்களுடைய ஆவணங்கள் கிடைக்கப்பெற்று இருக்கிறது உடனடியாக வந்து பதிவு செய்யுங்கள் என்று கூறி இந்த அப்பாவி தாய்மாரை மரண பதிவு எடுத்தால்தான் இலங்கை அரசாங்கத்தின் எந்த ஒரு உதவி திட்டமும் கிடைக்கும் என்று கூறி அவர்கள் கட்டாயப்படுத்தி மரண பதிவுகளையும் கொடுத்து இந்த மக்களை கஷ்டப்படுத்தி ஏற்கனவே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்ற மக்களை இன்னும் இன்னும் கஷ்டப்படுத்தி கொண்டு மன உள ரீதியான தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

இது ஒரு பொய்யான அலுவலகம் அல்லது இலங்கை உள்ளக பொறிமுறையை கொண்டு ஏமாற்றி ஏமாற்றி இந்த வேலைகளை இலங்கை அரசாங்கம் செய்து கால இழுத்தடிப்புகளை செய்து உறவுகளை தேடிக் கொண்டிருந்த 200க்கும் மேற்பட்ட தாய்மார்களை நாங்கள் இன்று இழந்து இருக்கின்றோம் சாட்சியங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது எங்களுடைய உண்மையான சாட்சியங்கள் இல்லாமல் போகின்றது.

கண்கண்ட சாட்சியங்களாக நாங்கள் இருக்கின்றோம் ஆனால் நாங்களும் இல்லாமல் போனால் இந்த கால இழுத்தடிப்புக்கு காரணமே அதுதான் உங்களை இல்லாமல் செய்தால் காணாமல் ஆக்கப்பட்ட விடயத்திற்கு குரல் கொடுப்பதற்கு யாரும் இல்லை என்று இந்த இலங்கை அரசாங்கமும் அதனோடு சேர்ந்து செயல்படுபவர்களும் நினைத்து கொண்டிருக்கின்றார்கள்.

இளம் சந்ததி இதனை கொன்டு செல்கின்றது இந்த கவனயீர்ப்பு போராட்டத்தின் ஊடாக இனி ஒவ்வொரு மாதமும் 24ஆம் தேதி இந்த காந்தி பூங்கா முன்பாக எங்களுடைய காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்களுடைய உரிமைகளுக்காக எங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதற்காக நாங்கள் இந்த இடத்தில் ஒன்று கூடி ஒவ்வொரு மாதமும் எமது குரலை கொடுப்போம். எங்களுக்கு நீதி கிடைக்கும் வரைக்கும் அல்லது சாகும் வரைக்கும் இந்த போராட்டம் தொடரும் என்றார் .

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More