1
பாராளுமன்றத்திற்கு அருகில் இன்று (03) சனிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் நான்கு இளைஞர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதிக வேகத்துடன் பயணித்த கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது, நான்கு இளைஞர்கள் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.