1
முட்டை ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தற்போது முட்டை ஒன்றின் விலை 28 முதல் 30 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.
முட்டை உற்பத்தியின் அதிகரிப்பே முட்டை விலை குறைப்புக்குக் காரணம் என அச்சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.