செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழ்ப்பாண வெதுப்பக மரபுரிமையின் உடனடி அருங்காட்சியகம்

யாழ்ப்பாண வெதுப்பக மரபுரிமையின் உடனடி அருங்காட்சியகம்

1 minutes read

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறையின் மாணவர் அமைப்பாகிய கலை வட்டத்தின் ஒழுங்குபடுத்தலின் கீழ் நுண்கலைத் துறை கலைக் கூடத்தில் வாணி பிஸ் கட்ஸ் யாழ்ப்பாண வெதுப்பக மரபுரி மையின் உடனடி அருங்காட்சியகம் எனும் மேலைத் தேய பிஸ்கட்ஸ் கலாசாரத்தை உள்ளூர் மயமாக்கிய முன்னோடி வெதுப்பகமாகவும் அதன் மூலம் உள்ளூர் உற்பத்திமைய பொருளாதாரத்திற்கு பங்களித்ததுமான வாணி பிஸ்கட்ஸ் நிறுவனத்தை முன்னிலைப்படுத்தி, பொதுப்படையாக யாழ்ப்பாண வெதுப்பக மரபுரிமைப் போக்குகளை அடையாளம் காணும் முயற்சியாக இக்காட்சி அமைகிறது.

இக் காட்சியானது நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகி எதிர்வரும் புதன்கிழமை (20)  வரை நடைபெறவுள்ளது. ஞாயிறு தவிர்ந்த ஏனைய நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பார்வைக்காகக் கலைக்கூடம் திறந் திருக்கும்.

இக்காட்சியினை பாடசாலை மாணவர்கள், கலை ஆர்வலர்கள், பொது மக்கள் அனைவரும் பார்வையிடலாம். இந்நிகழ்வின் தொடராக புதன்கிழமை (20) அன்று பிற்பகல் 2.30 மணிக்கு கலைக் கூடத்தில் வெதுப்பக உரிமையாளரான சபாபதிப்பிள்ளை நவரட்ணராசாவின் வாய்மொழி வரலாற்று உரையும் இடம்பெறவுள்ளது.

இவ்வுரையிலும் ஆர்வலர்கள் பங்கு பற்றலாம் என தலைவர் கலாநிதி பாக்கியநாதன் அகிலன் அறிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.