செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை போலி தங்க நகைகளை அடகு வைத்து பண மோசடி | ஒருவர் கைது

போலி தங்க நகைகளை அடகு வைத்து பண மோசடி | ஒருவர் கைது

0 minutes read

போலி தங்க நகைகளை அடகு வைத்து பண மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபரை ரக்வானை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மிக நுணுக்கமான வேலைப்பாடுகளோடு தயாரிக்கப்பட்ட 8 கிராம் எடையுடைய போலி தங்க மோதிரம் மற்றும் போலி தங்க நகைகளை அடகு வைத்து பெற்றுக்கொண்ட  பற்றுச்சீட்டுகள் சிலவற்றை பொலிஸார் சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றியுள்ளனர்.

இந்த போலி தங்க நகைகளை இந்த நபர், நீர்கொழும்பில் உள்ள ஒருவரிடமிருந்து பெற்றுக்கொண்டமை முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

கைதான நபர் பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் என தெரிவித்துள்ள ரக்வானை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.