செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பாடசாலைகளுக்கு 4,500க்கும் அதிகமான Smart Board | பிரதமர்

பாடசாலைகளுக்கு 4,500க்கும் அதிகமான Smart Board | பிரதமர்

1 minutes read

நடைமுறைப்படுத்தப்படும் பல கல்வி நவீனமயமாக்கல் திட்டங்களின் கீழ் நாடு முழுவதும் அமைந்துள்ள பாடசாலைகளுக்காக 4,570 ஸ்மார்ட் போர்ட்கள் இறக்குமதி செய்யப்பட்டு, பாடசாலைகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி குமாரி விஜேரத்னவினால் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போது பிரதமர் இன்று (22) பாராளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார்.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ், 2024ஆம் ஆண்டில் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் நிதி ஒதுக்கீட்டுத் திட்டத்தின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட 1,000 ஸ்மார்ட் போர்ட்கள், 1,000 பாடசாலைகளுக்கு இதுவரை விநியோகித்து முடிக்கப்பட்டுள்ளதாகவும், 2025-2026ஆம் ஆண்டிற்கான சீன உதவித் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட 900 ஸ்மார்ட் போர்ட்களில் 500 ஸ்மார்ட் போர்ட்கள் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

மேலும், சீன அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள திட்ட முகாமைத்துவக் குழுவினால் அந்த ஸ்மார்ட் போர்ட்களை நிறுவும் (Installation) பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கு மேலதிகமாக, டிஜிட்டல் செயலணிக்குழுவின் வழிகாட்டலின் கீழும், டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டுத் திட்டத்தின் கீழும் மாகாண மட்டத்தில் கொள்வனவு செய்யப்பட்ட 2,670 ஸ்மார்ட் போர்ட்களை முழுமையாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவற்றைப் பாடசாலைகளில் நிறுவும் பணிகளும் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார்.

இந்த டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மாகாண மட்டத்தில் ஸ்மார்ட் போர்ட்கள் விநியோகிக்கப்பட்டுள்ள விதத்தைப் பரிசீலிக்கும்போது, அதிக எண்ணிக்கையிலான ஸ்மார்ட் போர்ட்கள் வடமேல் மாகாணத்திற்கு (524) மற்றும் மேல் மாகாணத்திற்கு (481) வழங்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு மேலதிகமாக கிழக்கு மாகாணத்திற்கு 371, ஊவா மாகாணத்திற்கு 363, தென் மாகாணத்திற்கு 311, வடமத்திய மாகாணத்திற்கு 200, மத்திய மாகாணத்திற்கு 170, சப்ரகமுவ மாகாணத்திற்கு 150 மற்றும் வட மாகாணத்திற்கு 100 ஸ்மார்ட் போர்ட்கள் வீதம் வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

பாடசாலை வகுப்பறைகளை டிஜிட்டல்மயமாக்கி, நவீன தொழில்நுட்பத்தை மாணவர்களுக்கு நெருக்கமாகக் கொண்டுவருவதே இந்த அனைத்து திட்டங்களினதும் பிரதான நோக்கமாகும் என பிரதமர் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.