செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வடக்கு, கிழக்கின் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும் | அமைச்சர் தம்மிக படபெந்தி

வடக்கு, கிழக்கின் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும் | அமைச்சர் தம்மிக படபெந்தி

1 minutes read

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வீரானைக்கல் விவசாய அமைப்புக்குச் சொந்தமான சுமார் 560  ஏக்கர் காணியை, வன ஒதுக்கமாக பிரகடனப்படுத்துவதற்கு வனப்பாதுகாப்புத் திணைக்களம் முன்மொழிந்துள்ளது. அமைச்சரவை உப குழுவுக்குழுவின் அறிக்கைக்கு அமைவாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வனவளத்துறை மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்துள்ள காணி பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும். இந்த அறிக்கை எதிர்வரும் மாதத்துக்குள் வெளியிடப்படும் என சுற்றாடல்துறை அமைச்சர் தம்மிக படபெந்தி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (25) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் வனப் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் 94532.32 ஹெக்டயார் பகுதி வனப்பகுதிகளாக வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல் 18,011.78 ஹெக்டயார் பகுதி வன ஒதுக்கங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

வன ஒதுக்கங்களாகப் பிரகடனப்படுத்துவதற்கு  பிரதேச செயலாக பிரிவுகளினால் 18,011.78 ஹெக்டயார் நிலப்பகுதி முன்மொழியப்பட்டது.பிரதேச செயலக பிரிவுகளுக்கு 110,94.21  ஹெக்டயார்  நிலப்பரப்பை விடுவிக்க முன்மொழியப்பட்டுள்ள நிலையில் இதுவரையில் 846.68 ஹெக்டயார் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர்  பிரிவிலுள்ள வீரானைக்கல் விவசாய அமைப்புக்குச் சொந்தமான சுமார் 560  ஏக்கர் காணியை, வன ஒதுக்கமாக பிரகடனப்படுத்துவதற்கு வனப்பாதுகாப்புத் திணைக்களம் முன்மொழிந்துள்ளது.

1979 ஆம் ஆண்டு முதல் பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்தப்பட்டு, 1983 ஆம் ஆண்டு முதல்  வருடாந்த காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டமை தொடர்பில் ஏறாவூர்பற்று பிரதேச சபை ஊடாக வருடாந்த அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டமைக்கான ஆவணங்கள் ஏதும் இல்லை.

2008/ 04 ஆம் இலக்க சுற்றுநிருபத்தின் ஏற்பாடுகளுக்கமைவாக மேற்படி காணியை விவசாயிகளுக்கு மீள வழங்க  முடியாது. ஏனெனில் அந்த பகுதி வனப்பகுதியாகவும், காட்டு யானைகள் நடமாடும் பகுதியாகவும் காணப்படுவதால் விவசாய நடவடிக்கைகளுக்கு அந்த நிலம் பொருத்தமற்றது என்று  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வனவளத்துறை திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம்  ஊடாக தோற்றம் பெற்றுள்ள காணி பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அமைச்சரவை உப குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. தகவல் பெறுதல் மற்றும் இதர தொழில்நுட்ப காரணிகளால் இந்த குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

அமைச்சரவை உப குழுவுக்குழுவின் அறிக்கைக்கு அமைவாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வனவளத்துறை மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்துள்ள காணி பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும். இந்த அறிக்கை எதிர்வரும் மாதத்துக்குள் வெளியிடப்படும் என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.