செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழ்ப்பாணத்தில் கூர்மையான ஆயுதங்கள் மற்றும் ரூ. 9 லட்சம் பணத்துடன் 09 பேர் கைது!

யாழ்ப்பாணத்தில் கூர்மையான ஆயுதங்கள் மற்றும் ரூ. 9 லட்சம் பணத்துடன் 09 பேர் கைது!

1 minutes read

யாழ்ப்பாண நகருக்கு அருகில் கூர்மையான ஆயுதங்கள் மற்றும் 900,000 ரூபாய் பணத்துடன் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்ததாகக் கூறப்படும் பெண் ஒருவர் உட்பட ஒன்பது பேரை யாழ்ப்பாணப் போலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாண நகருக்கு அருகில் போலிஸ்  ரோந்துப்   பிரிவினர்   இந்த குழுவை நிறுத்தி சோதனை செய்த போதே இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் அந்த நேரத்தில் ஒரு கார் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பயணித்துக் கொண்டிருந்தனர்.

காரின் உள்ளே பல கூர்மையான ஆயுதங்கள் மற்றும் 900,000 ரூபாய் பணம் கண்டெடுக்கப்பட்டதாகவும்  போலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து, போலிஸார் ஒன்பது சந்தேக நபர்களையும் கைது செய்ததுடன், அவர்கள் பயன்படுத்திய கார் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்துள்ளனர்

சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து யாழ்ப்பாணப் போலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.