செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை குழந்தை பராமரிப்பு வழக்கு கிரிக்கெட் வீரர் சாமிக கருணாரத்னவை கைது செய்ய பிடியாணை

குழந்தை பராமரிப்பு வழக்கு கிரிக்கெட் வீரர் சாமிக கருணாரத்னவை கைது செய்ய பிடியாணை

1 minutes read

குழந்தை ஒன்றின் தந்தை தான்தான் என்ற குற்றச்சாட்டை நிராகரித்துள்ள நிலையில், குறித்த குழந்தையின் பராமரிப்பு வழக்கு தொடர்பான விசாரணைக்கு கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியமையினால்,  கிரிக்கெட் வீரர் சாமிக கருணாரத்னவை கைது செய்யுமாறு கொழும்பு  நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

மேற்படி வழக்கு திங்கட்கிழமை (28) கொழும்பு மேலதிக நீதிவான் கசுன் காஞ்சன தசநாயக்க முன்னிலையில்  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அவர்  இவ்வாறு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இன்று  வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சாமிக கருணாரத்ன நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.

இருப்பினும், சாமிக கருணாரத்ன தற்போது 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய கடமையில் ஈடுபடுவதற்காக ஜப்பானில் தங்கியுள்ளார்.

வழக்கு அழைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், தேசிய கடமை காரணமாகவே அவர் ஆஜராகவில்லை என்பது நீதிமன்றத்திற்கு முறையாக அறிவிக்கப்படவில்லை.

ஆகையால்  அவரை கைதுசெய்து  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதிவான் கசுன் காஞ்சன தசநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

குறித்த குழந்தைக்குரிய  பராமரிப்புக்கான பணத்தை அறவிட்டுத் தருமாறு கோரியே இந்த நீதிமன்ற நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், அக்குழந்தையின் பராமரிப்புக்கு தேவையான பணத்தை செலுத்துமாறு சாமிக கருணாரத்னவிற்கு உத்தரவிடுமாறும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த குழந்தையின் தந்தை தான் என்பதை சாமிக கருணாரத்ன திட்டவட்டமாக மறுத்துள்ளார்.    இந்த வழக்கு எதிர்வரும் ஜனவரி 4ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.