செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஆசிரியர் ஆட்சேர்ப்பில் குறைபாடுகள்: கல்விக் கட்டமைப்பில் நெருக்கடி | ஜோசப் ஸ்டாலின்

ஆசிரியர் ஆட்சேர்ப்பில் குறைபாடுகள்: கல்விக் கட்டமைப்பில் நெருக்கடி | ஜோசப் ஸ்டாலின்

1 minutes read

பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்யும் செயன்முறையில் காணப்படும் பாரிய குறைபாடுகள் காரணமாக, நாட்டின் கல்விக் கட்டமைப்பில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்புத் தொடர்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டின் பாடசாலைகளில் 46,000 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக ஆண்டின் ஆரம்பத்தில் பிரதமரும் கல்வி அமைச்சரும் தெரிவித்திருந்தனர் பின்னர் குறிப்;பிட்ட எண்ணிக்கையானது 36,000 ஆகக் குறைக்கப்பட்டது. எனினும், ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இந்நிலையில், 23,000 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதாக அரசாங்கம் அறிவித்திருந்தாலும், ஆரம்பகட்டமாக சுமார் 17,000 விண்ணப்பதாரர்கள் மாத்திரமே நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். நேர்முகப் பரீட்சைகள் அடுத்த மாதத்தின் நடுப்பகுதியில் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதால், ஆசிரியர் நியமனங்கள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு முன்னர் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது.

மேலும், ஆசிரியர் பற்றாக்குறை காரணமாகப் பல பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதுடன், ஆசிரியர்களின் இடமாற்றங்களும் தடைப்பட்டுள்ளது. இதற்கு பதில் ஆசிரியர்கள் இதுவரை நியமிக்கப்படாததால், சில ஆசிரியர்கள் ஒரே பாடசாலையில் 12 முதல் 13 ஆண்டுகள் வரை பணியாற்ற வேண்டிய நிலை கடினமான நிலைத் தோன்றியுள்ளது.

ஆசிரியர் வெற்றிடங்கள் முழுமையாக நிரப்பப்படாத நிலையில், கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்துவது வேடிக்கையானது. பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்புப் போட்டிப் பரீட்சைக்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் காணப்படும் தெளிவின்மை மற்றும் நடைமுறைக் குறைபாடுகளே தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்குக் காரணமாகியுள்ளதுடன் ஆசிரியர்களின்றித் தவிக்கும் மாணவர்களின் கல்வி நிலைமைக்குத் தீர்வு காண வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் உணர வேண்டும் என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.