செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கொழும்பு வெள்ளம் | உடனடித் தீர்வுகளை கண்டறிய விசேட கலந்துரையாடல்

கொழும்பு வெள்ளம் | உடனடித் தீர்வுகளை கண்டறிய விசேட கலந்துரையாடல்

1 minutes read

கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை (6) மாலை பெய்த கடும் மழையைத் தொடர்ந்து நகரில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளுக்கு உடனடித் தீர்வுகளை கண்டறிவதற்காக, கொழும்பு மாநகர மேயர் விராய் கெலி பால்தசார் தலைமையில் அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கும் விசேட கலந்துரையாடல் ஒன்று தற்போது இடம்பெற்று வருகிறது.

கொழும்பு நகரின் வடிகால் கட்டமைப்புகளை மேம்படுத்துதல், கால்வாய் திட்டங்களில் காணப்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் மற்றும் வீதிக் கட்டமைப்புகளைச் சீரமைத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

நேற்று மாலை கொழும்பில் பெய்த கடும் மழை காரணமாக நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதுடன், போக்குவரத்து உள்ளிட்ட அன்றாட நடவடிக்கைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டன.

இந்நிலையில், கொழும்பு நகரின் வடிகால் கட்டமைப்பு சுமார் 30 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியை மட்டுமே தாங்கக்கூடிய கொள்ளளவைக் கொண்டுள்ள வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக மாநகர மேயர் முன்னதாகத் தெரிவித்திருந்தார்.

எனினும், கடந்த வெள்ளிக்கிழமை சில மணித்தியாலங்களுக்குள் கொழும்பில் 129 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதனால், தற்போதைய வெள்ளப் பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு வடிகால் கட்டமைப்புகளின் கொள்ளளவை அதிகரித்தல் மற்றும் நகரின் வெள்ள அனர்த்த முகாமைத்துவத்தை வலுப்படுத்துதல் தொடர்பில் விசேட கலந்துரையாடலில் ஆராயப்பட்டு வருகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.