தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் முன்னாள் தலைவர் நிஷாந்த ரணதுங்கவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் முன்னாள் தலைவராகப் பணியாற்றிய காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட நிஷாந்த ரணதுங்க, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்தப் பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, நிதியைப் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் இவரைக் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.