Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பிரதமர் மோடி இன்று தமிழகத்திற்கு விஜயம் – பாதுகாப்பு தீவிரம்

பிரதமர் மோடி இன்று தமிழகத்திற்கு விஜயம் – பாதுகாப்பு தீவிரம்

1 minutes read

பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இதன்போது, பிரதமர் மோடி 4 ஆயிரத்து 486 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை தொடங்கி வைக்கவுள்ளார்.

பிரதமரின் வருகையை முன்னிட்டு 10 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று காலை 11 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி வருகிறார்.

3 ஆயிரத்து 770 கோடி மதிப்பிலான சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்ட விரிவாக்கத் திட்டத்தில் வடிவமைக்கப்பட்ட 9 கிலோ மீட்டர் நீளமுள்ள வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் தொடங்கி வைக்கவுள்ளார்.

293 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட சென்னை கடற்கரை -அத்திப்பட்டு இடையிலான நான்காவது ரயில் பாதை திட்டத்தை அவர் தொடங்கி வைக்கிறார்.

அதன்பின்னர் 423 கோடி ரூபாய் மதிப்பில் மின்வழித் தடமாக மாற்றப்பட்ட விழுப்புரம்-கடலூர், மயிலாடுதுறை-தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை-திருவாரூர் இடையிலான ஒற்றை வழி ரயில் பாதையையும் பிரதமர் தொடங்கி வைக்கவுள்ளார்.

உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட அர்ஜீன் போர் டாங்கியை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் பிரதமர் நரேந்திர மோடி, 2 ஆயிரத்து 640 கோடி மதிப்பில் கல்லணை கால்வாய் சீரமைப்பு மற்றும் புதுப்பித்தல் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டவுள்ளார்.

இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகம் சார்பில் சென்னையை அடுத்த தையூரில் 2 இலட்சம் சதுர மீட்டரில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ஆராய்ச்சி வளாகத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.

பிரதமரின் வருகையை முன்னிட்டு சென்னையில் 10 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பிரதமர் பயணிக்கும் பாதைகளில் போக்குவரத்து மாற்றமும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதுடன், சென்னையில் நிகழ்ச்சிகள் முடிவடைந்த பின்னர் பிரதமர் மோடி பிற்பகலில் கொச்சிக்கு செல்லவுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More