Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் மக்கள் நீதி மய்யத்தின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மக்கள் நீதி மய்யத்தின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

1 minutes read

மக்கள் நீதி மய்யத்தின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் கோவை தெற்கு தொகுதியில் கமலஹாசன் போட்டியிடுகிறார்.

மக்கள் நீதி மய்யத்தின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று சென்னையில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார்.

இதில் சென்னை தி நகர் தொகுதியில் அக்கட்சியில் அண்மையில் இணைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ கருப்பையா போட்டியிடுகிறார். 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் நடிகை ஸ்ரீபிரியா மயிலாப்பூர் தொகுதியிலும், மக்கள் நீதி மைய கட்சியின் துணைத் தலைவரான மகேந்திரன் சிங்காநல்லூர் தொகுதியிலும், ஆலந்தூர் தொகுதியில் நடிகர் ஆனந்த் பாபுவும்,  முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் அவருக்கு எதிராக தாசப்பராஜ் என்பவரும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அத்துடன் காலியாக இருக்கும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் அக்கட்சியின் சார்பில் சுபா சார்ல்ஸ் போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More