Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் கொளத்தூரில் ஸ்டாலின் சேப்பாக்கத்தில் உதயநிதி | தி.மு.க. வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

கொளத்தூரில் ஸ்டாலின் சேப்பாக்கத்தில் உதயநிதி | தி.மு.க. வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

1 minutes read

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தப் பட்டியல் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள நிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் சென்னை மாவட்டம் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடவுள்ளார்.

வேட்பாளர் பட்டியலுடன் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்துக்குச் சென்று கருணாநிதி படத்துக்குக் கீழே வேட்பாளர் பட்டியலை வைத்து வணக்கம் செலுத்தினார்.

அதன்பின்னர், மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி சமாதிக்குச் சென்ற மு.க.ஸ்டாலின், அங்கும் வேட்பாளர் பட்டியலை வைத்து வணங்கினார்.

இதையடுத்து, அண்ணா அறிவாலயத்தில் வைத்து தி.மு.க.வின் வேட்பாளர் பட்டியலை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

கூட்டணி கட்சிகளுக்கு 61 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 173 தொகுதிகளில் தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More