Wednesday, March 3, 2021

இதையும் படிங்க

ஈராக்கில் அமெரிக்க விமான நிலையத்தை குறிவைத்து 10 ராக்கெட் தாக்குதல்கள்

மேற்கு ஈராக்கில் புதன்கிழமை அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படையினர் நடத்தும் ஒரு இராணுவ தளத்தை குறிவைத்து குறைந்தது 10 ராக்கெட் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மேற்கிந்தியத்தீவுகள் – இலங்கைக்கிடையேயான டி-20 கிரிக்கெட் சமர் நாளை அதிகாலை

இலங்கை மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு : 20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இலங்கை நேரப்படி நாளை அதிகாலை ஆரம்பமாகவுள்ளது.

இரணை தீவை தெரிவு செய்து இனங்களுக்கிடையில் முரண்பாட்டை தோற்றுவிக்க முயற்சி | எதிர்க்கட்சி

கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு பொறுத்தமான 6 இடங்கள் வைத்தியத்துறை நிபுணர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ள போதிலும், அவற்றை கவனத்தில் கொள்ளாது இரணைதீவில் அடக்கம் செய்ய தீர்மானித்துள்ளதன் மூலம் அரசாங்கம்...

‘கொவிட் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்ய வேண்டாம்’

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் தீர்மானம் எமக்கு மிகுந்த வேதனையளிக்கிறது. இரணைதீவு என்பது கத்தோலிக்கர்கள் செறிந்து வாழ்கின்ற, நீரினால் சூழப்பட்ட ஒரு...

கொரோனா சடலங்களை புதைப்பதற்கு இரணைதீவை தேர்ந்தெடுப்பதை ஏற்க முடியாது | வீ. ஆனந்தசங்கரி

தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி இன்று புதன்கிழமை (03) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இரணைதீவில் அடக்கம் செய்தால் பல்லின சமூகங்களுக்கு இடையில் குழப்பங்கள் ஏற்படும் | திஸ்ஸ அத்தநாயக்க

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்ய முடியுமென்றால், அவற்றை நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அடக்கம் செய்ய முடியும் அல்லவா...

ஆசிரியர்

பாரீஸ் ஒப்பந்தம், உலக சுகாதார அமைப்பில் மீண்டும் இணைவது உள்ளிட்ட 17 உத்தரவுகளில் பைடன் கையெழுத்து!

வாஷிங்டன்: கடந்த ஆட்சியில் முன்னாள் அதிபர் டிரம்ப் உலகளவில் எடுத்த பல்வேறு அதிரடி முடிவுகளை, பதவியேற்ற முதல் நாளே அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அடித்து நொறுக்கினார். பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம், உலக சுகாதார அமைப்பில் மீண்டும் இணைதல் உள்ளிட்ட 17 முக்கிய நிர்வாக உத்தரவுகளில் அவர் கையெழுத்திட்டார். அமெரிக்காவில் கடந்த நவம்பர் 3ம் தேதி நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார்.

துணை அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் வாஷிங்டனில் பதவியேற்று கொண்டனர். அதன் பிறகு, தேர்தலில் அமெரிக்க மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றும் விதத்தில் ஒரே நாளில் 17 நிர்வாக உத்தரவுகளில் பைடன் கையெழுத்திட்டார்.

அவற்றில் பெரும்பாலானவை, கடந்த ஆட்சியில் அதிபராக இருந்த டிரம்ப்பால் நீக்கப்பட்டவை. குறிப்பாக, தேசிய பாதுகாப்பு கொள்கை, குடியுரிமை சட்டங்கள், பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவது, உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகியது போன்ற முடிவுகளை அவர் எடுத்திருந்தார். நேற்று போட்ட 17 கையெழுத்துகளின் மூலம், அவற்றை எல்லாம் ரத்து செய்த பைடன், எல்லாவற்றையும் பழைய நிலைக்கே கொண்டு வந்துள்ளார்.

 • வெளியுறவு கொள்கையில் புதிய மாற்றங்கள்.
 • தேசிய பாதுகாப்பு கொள்கை முடிவுகள்.
 • பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைதல்.
 • உலக சுகாதார அமைப்பில் அமெரிக்கா இருந்து விலகியதை திரும்ப பெறுதல்.
 • முஸ்லிம்கள் மீதான பயணத் தடையை நீக்குதல்.
 • மெக்சிகோவில் எழுப்பப்படும் எல்லைச் சுவர் கட்டுமான பணியை உடனடியாக நிறுத்துதல்.
 • கொரோனா தொற்று, பொருளாதார சிக்கல்களுக்கு எதிரான கூட்டு நடவடிக்கை.
 • முதல் 100 நாள் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்குதல்.
 • பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் கட்டுப்பாடுகளை திரும்ப பெறுதல்.
 • இன வேறுபாடுகளை வேரறுக்கும் கூட்டாட்சி அமைப்பு.
 • அமெரிக்க குடியுரிமை சட்ட திருத்த மசோதா உள்பட 17 நிர்வாக உத்தரவுகளில் பைடன் கையெழுத்திட்டு உள்ளார்.

இது ஆரம்பம்
மட்டும்தான் நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்ட பிறகு, வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் பைடன் அளித்த பேட்டியில், “அமெரிக்க மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற, நிர்வாக உத்தரவில் இன்று கையெழுத்திட்டிருப்பதை நினைத்து பெருமைப்படுகிறேன். இவை வெறும் நிர்வாக உத்தரவுகள் மட்டுமே. ஆனாலும், முக்கியமானவைகள். இன்னும் நிறைவேற்ற வேண்டியவை ஏராளமாக உள்ளன.

இனிவரும் நாட்களில் இன்னும் நிறைய நிர்வாக உத்தரவில் கையெழுத்திட இருக்கிறேன். இவை அனைத்தும் ஆரம்பமே. விரைவில் அமெரிக்க பொருளாதாரத்தை கட்டி எழுப்பும் நடவடிக்கைகள் தொடங்கப்பட உள்ளன. நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் நடுத்தர வகுப்பினரின் மீது பிரதான கவனம் செலுத்த உள்ளேன். இவற்றை தொடங்குவதற்கு இதை விட சிறந்த நாள் வேறு எதுவும் இருக்க முடியாது,” என்றார்.

ஐநா , உலக சுகாதார அமைப்பு வரவேற்பு
பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்திலும், உலக சுகாதாரஅமைப்பிலும் அமெரிக்கா மீண்டும் இணைவதை ஐநா பொதுச் செயலாளர் பொதுச் செயலாளர் ஆன்டோனியோ கட்டரெசும், உலக சுகாதார அமைப்பின் தலைவரும் வரவேற்றுள்ளனர்.

பைடனுக்கு டிரம்ப் மனம் திறந்த கடிதம்
அமெரிக்காவில் பதவி விலகும் அதிபர், வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் புதிய அதிபருக்கு கடிதம் ஒன்றை எழுதி. அங்கிருக்கும் தீர்மானம் எடுக்கும் மேசையின் மீது விட்டு செல்வது மரபு. அதன்படி, முன்னாள் அதிபர் டிரம்ப் தனக்கு மனம் திறந்து கடிதம் எழுதி இருப்பதாக அதிபர் பைடன் நேற்று தெரிவித்தார். ‘‘டிரம்ப்புடன் பேசும் வரை அக்கடிதத்தில் என்ன எழுதி இருக்கிறது என்பது பற்றி சொல்ல மாட்டேன். ஏனெனில், அது மிகவும் அந்தரங்கமானது. ஆனால் அக்கடிதத்தை அவர் மிகவும் மனம் திறந்து பண்புடன் எழுதி உள்ளார்,’’ என்றார் பைடன். 17 நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திடும் முன்பாக பைடன் அக்கடிதத்தை வாசித்து பார்த்து, தானே வைத்துக் கொண்டார்.

டிரம்ப் தனிக் கட்சி?

நாடாளுமன்றத்தில் நுழைந்து டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறையால், குடியரசு கட்சியில் டிரம்ப் மீது கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதனால், விரக்தி அடைந்துள்ள டிரம்ப், ‘பேட்ரியாட் பார்ட்டி’ (தேசபக்தர் கட்சி) என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்குவது குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இருண்ட காலத்திலும் கனவு காணவில்லை: முதல் உரையில் கமலா உருக்கம்
அமெரிக்க துணை அதிபராக பதவியேற்றுள்ள கமலா ஹாரிஸ் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர். துணை அதிபராக பதவியேற்ற பிறகு நாட்டு மக்களுக்கு இவர் ஆற்றிய முதல் உரையில், “நாம் கனவு மட்டும் காண்பவர்கள் அல்ல, எதையும் செய்ய கூடியவர்கள். இருண்ட காலங்களில் கூட நாம் யார் என்பதை இது காட்டி உள்ளது. அமெரிக்கர்கள் கண்ணுக்கு தெரிந்ததை மட்டும் பார்ப்பதில்லை. அதையும் தாண்டி, எதை பார்க்க முடியும் என்று நினைப்பவர்கள். அதனால்தான், நிலவில் கால் ஊன்றினோம்.

அமெரிக்கர்களின் விருப்பமே, இந்நாட்டின் பெண்களை வழி நடத்தி செல்கிறது. அதுவே, அவர்களை சம உரிமை கோருவதற்கு தூண்டியது. இந்தியாவில் இருந்து அமெரிக்கா வந்து குடியேறிய எனது தாய் என்னையும், எனது சகோதரி மாயாவையும் வளர்க்கும் போது, நாம் முதலில் வர முடியாவிட்டாலும், கடைசியாக இருக்கக் கூடாது என்று கூறி வளர்த்தார். அவர் என் மீது வைத்த அசைக்க முடியாத நம்பிக்கை தான், இன்று என்னை இந்த இடத்தில் உயர்த்தி உள்ளது,” என்று உருக்கமாக பேசினார்.

இதையும் படிங்க

சிவசக்தி ஆனந்தனிடம் மூன்றாவது தடவையாகவும் பொலிஸார் விசாரணை

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தனிடம் மூன்றாவது தடவையாகவும் மூன்று பொலிஸ் பிரிவுகளின் பொலிஸார் இன்றையதினம்(02-03-2021) விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் சச்சித்ரவிடம் தீவிர விசாரணை

ஹம்பாந்தோட்டையில் நடந்து முடிந்த எல்.பி.எல். எனும் லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ஆட்ட நிர்ணய நடவடிக்கைகளுக்கு வீரர்களை தூண்டியதாக கூறப்படும் விவகாரத்தில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சகல...

கிழக்கு ஆப்கானில் மூன்று பெண் ஊடக ஊழியர்கள் சுட்டுக்கொலை

கிழக்கு ஆப்கானிஸ்தான் நகரமான ஜலாலாபாத்தில் செவ்வாய்க்கிழமை மூன்று பெண் ஊடக ஊழியர்கள் பணியினை முடித்துவிட்டு வீடு நோக்கி சென்று கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தெற்கு கலிபோர்னியாவில் ஏற்பட்ட கோர விபத்தில் 13 பேர் பலி

அமெரிக்க-மெக்ஸிக்கோ எல்லைக்கு அருகே தெற்கு கலிபோர்னியாவில் ட்ரக் - கெப் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.

ஆட்ட நிர்ணய முயற்சி : இலங்கை வீரர் சச்சித்ரவின் முன் பிணை கோரும் மனு நிராகரிப்பு

ஹம்பாந்தோட்டையில் நடந்து முடிந்த எல்.பி.எல். எனும் லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ஆட்ட நிர்ணய நடவடிக்கைகளுக்கு வீரர்களை தூண்டியதாக கூறப்படும் விவகாரத்தில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சகல...

கிளிநொச்சியில் சிறப்பாக நடந்த நடுகை வெளியீட்டு விழா!

நடுகை கவிதை இதழ் வெளியீட்டு நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (28.02.2021) மாலை  கிளிநொச்சி கரைச்சி பிரதேசசபை மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நிறைவுபெற்றது. நடுகை " அம்பலம்" சஞ்சிகையை நடாத்தி வந்த  குழுமத்தினரால்.....

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மீண்டும் தமிழகம் வரும் அமித்ஷா!

உள்துறை அமைச்சர் அமித்ஷா, மற்றும் பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் எதிர்வரும் 7 ஆம் திகதி மீண்டும் தமிழகம் வருகைத்தரவுள்ளனர். தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம்...

சட்டமன்ற தேர்தல் : இரண்டாவது நாளாக தொடர்கிறது தி.மு.கவின் நேர்காணல்!

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் இரண்டாவது நாளாக இன்று (புதன்கிழமை) நேர்காணல் நடைபெறுகிறது. கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும்...

வவுனியாவில் இராணுவத்தின் துப்பாக்கி சூட்டில் இருவர் காயம்!

இந்த சம்பவம் இன்று (புதன்கிழமை) காலை 4 மணிக்கு இடம்பெற்றுள்ளது. ஓமந்தை காட்டுப் பகுதியில் இருந்து சட்டவிரோதமாக மரங்களை கடத்திச் சென்ற வாகனத்தை வீதியில் கடமையில்...

மேலும் பதிவுகள்

மாகாண மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் உறுப்பினர்களை சந்திக்கிறார் ஜனாதிபதி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் மாகாண மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று (செவ்வாய்க்கிழமை) விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தைக்கு இணக்கமான சூழலை உருவாக்கும் பொறுப்பு பாகிஸ்தானிடம்தான் உள்ளது!

தீவிரவாதத்தை கட்டுப்படுத்தி பேச்சுவார்த்தைக்கு இணக்கமான சூழலை உருவாக்கும் பொறுப்பு பாகிஸ்தானிடம்தான் உள்ளது என வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார். இலங்கை வருகை தந்த...

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படும் சாத்தியம்?

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகின்றது.

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 02.03.2021

மேஷம்மேஷம்: தேவைக்கேற்ப பண வரவு உண்டு. பேச்சை குறைத்து செயலில் வேகம் காட்டுவீர்கள். பழைய உறவினர் நண்பர்கள் வீடு தேடி வருவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில்...

இலங்கைத் தமிழர் விடயத்தில் மீண்டும் தோல்வியடைக் கூடாது!

இலங்கைத் தமிழர் விடயத்தில் சர்வதேசமானது முன்னர் தோல்வி அடைந்ததைப் போல மீண்டும் தோல்வியடைந்து விடக்கூடாது என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள்...

சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி!

தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்படி...

பிந்திய செய்திகள்

சிவசக்தி ஆனந்தனிடம் மூன்றாவது தடவையாகவும் பொலிஸார் விசாரணை

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தனிடம் மூன்றாவது தடவையாகவும் மூன்று பொலிஸ் பிரிவுகளின் பொலிஸார் இன்றையதினம்(02-03-2021) விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் சச்சித்ரவிடம் தீவிர விசாரணை

ஹம்பாந்தோட்டையில் நடந்து முடிந்த எல்.பி.எல். எனும் லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ஆட்ட நிர்ணய நடவடிக்கைகளுக்கு வீரர்களை தூண்டியதாக கூறப்படும் விவகாரத்தில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சகல...

ரீமேக் படத்தில் நடிப்பதை உறுதிசெய்த ஐஸ்வர்யா ராஜேஷ்

மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படம் தமிழில் ரீமேக் ஆக உள்ளது.மலையாளத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம்...

கிழக்கு ஆப்கானில் மூன்று பெண் ஊடக ஊழியர்கள் சுட்டுக்கொலை

கிழக்கு ஆப்கானிஸ்தான் நகரமான ஜலாலாபாத்தில் செவ்வாய்க்கிழமை மூன்று பெண் ஊடக ஊழியர்கள் பணியினை முடித்துவிட்டு வீடு நோக்கி சென்று கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தெற்கு கலிபோர்னியாவில் ஏற்பட்ட கோர விபத்தில் 13 பேர் பலி

அமெரிக்க-மெக்ஸிக்கோ எல்லைக்கு அருகே தெற்கு கலிபோர்னியாவில் ட்ரக் - கெப் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.

ஆட்ட நிர்ணய முயற்சி : இலங்கை வீரர் சச்சித்ரவின் முன் பிணை கோரும் மனு நிராகரிப்பு

ஹம்பாந்தோட்டையில் நடந்து முடிந்த எல்.பி.எல். எனும் லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ஆட்ட நிர்ணய நடவடிக்கைகளுக்கு வீரர்களை தூண்டியதாக கூறப்படும் விவகாரத்தில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சகல...

துயர் பகிர்வு