செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கிச் சூடு 4 பேர் பலி!

அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கிச் சூடு 4 பேர் பலி!

0 minutes read

ஆரஞ்ச்: அமெரிக்காவில் சமீப காலமாக பொது இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவது அதிகமாகி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு கூட, 10 பேர் இதுபோல் சுட்டுக்
கொல்லப்பட்டனர். இந்நிலையில், கலிபோர்னியா மாகாணத்தின் வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த ஆரஞ்ச் பகுதி, எப்போதும் மக்கள் நடமாட்டத்துடன் பரபரப்பாக காணப்படும். இங்குள்ள லிங்கன் அவின்யூவில் உள்ள 2 மாடி கட்டிடத்தில் நேற்று புகுந்த மர்ம நபர், அங்கு இருந்தவர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டினான்.

இதனால், மக்கள் தப்பியோட முயன்றனர். அவர்கள் மீது அந்த நபர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினான். இதில், குழந்தை உட்பட 4 பேர் கொல்லப்பட்டனர். தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார், தப்பி ஓட முயன்ற அந்த நபரை துப்பாக்கியால் சுட்டனர். இதில் பலத்த காயமடைந்த அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மேலும், காயமடைந்த நபர்களும் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.