வாஷிங்டன்: அமெரிக்க அரசு தனது நாட்டு குடிமக்களுக்கு பயண கால எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதன்படி, இந்தியாவுக்கு அமெரிக்கர்கள் யாரும் பயணம் செய்ய வேண்டாம் என கூறியுள்ளது.
இந்தியாவில் இருந்து எவ்வளவு சீக்கிரம் கிளம்ப முடியுமோ அவ்வளவு நல்லது என தெரிவித்து உள்ளது என தெரிவித்துள்ளது. இந்தியாவில் மருத்துவ உதவி பெறுவது கடுமையாக உள்ளது. வரைமுறைக்கு உட்பட்டே சிகிச்சை கிடைத்து வருகிறது.
அதனால் கிடைக்கும் போக்குவரத்து வசதிகளை கொண்டு உடனடியாக இந்தியாவை விட்டு கிளம்பும்படி அறிவுறுத்தி உள்ளது.
அமெரிக்காவுக்கான நேரடி விமான சேவை தினந்தோறும் செயல்படுகிறது. பாரீஸ் மற்றும் பிராங்பர்ட் வழியேயும் விமானங்கள் அமெரிக்கா வந்தடைகின்றன என டுவிட்டரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் இருந்து எவ்வளவு சீக்கிரம் கிளம்ப முடியுமோ அவ்வளவுக்கு நல்லது என தன் நாட்டு மக்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. இந்தியாவில் நடப்பு ஆண்டு ஏப்ரல் தொடக்கத்தில் இருந்து நாள்தோறும் கொரோனா பாதிப்புகள் புதிய உச்சம் தொட்டு வருகின்றன