தமிழில் தற்போது காமெடி நடிகர்களுள் இவரும் ஒருவர். சமீபத்தில் தான் திடீர் திருமணம் செய்துக்கொண்டார். திருமணமான கையோடு மனைவியுடன் தேன் நிலவு கொண்டாட சென்றுவிட்டாராம்.
ஆனால் அவர் நடிக்க ஒப்புக்கொண்ட படங்கள் நிறைய இருக்கிறதாம். அதெல்லாம் அப்பறம் பாத்துக்கலாம் என்று சொல்லிவிட்டு மனைவியுடன் பிஸியாக இருக்காராம்.
இந்நிலையில் திடீர் என்று வலிமையான படத்தில் நடிக்க அவருக்கு அழைப்பு வந்ததாம். இதை மறுக்க முடியாததால், தேன்நிலவை சில மாதங்கள் தள்ளிப்போட்டு வருத்தத்தில் இருக்கிறாராம்.