செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா குஜராத்தில் கரையை கடக்கும் டாக்டே புயல்!

குஜராத்தில் கரையை கடக்கும் டாக்டே புயல்!

1 minutes read

அதிதீவிர புயலாக உருமாறியுள்ள டாக்டே புயல் இன்று (திங்கட்கிழமை) குஜராத் கடல் பகுதியை அடையவுள்ளதாகவும், நாளை கரையை கடக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘டாக்டே புயல் குஜராத் கடல் பகுதியை அடையும்போது, அதிதீவிர புயலாக மாறி மணிக்கு 15 -175 கி.மீ வேகத்தில் காற்று வீசும்.

ஆமதாபாத், சூரத், ஆனந்த், பாவ்நகர் உள்ளிட்ட கடற்கரையோர பகுதிகளில், கடல் சீற்றம் கடுமையாக இருக்கும். குடிசை வீடுகள் மற்றும் இதர குடியிருப்பு பகுதிகளில் அதிகளவில் சேதம் ஏற்படலாம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் குறித்த புயல் வலுப்பெற்றுள்ளதன் காரணமாக குஜராத் மாநிலத்தின் கடலோரபகுதிகளில் வசித்த 1.50 இலட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

புயல் கரையை கடக்கும் போது பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முப்படையினர், ஹெலிகொப்டர்களுடன் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.