செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா அகதிகள் மறுவாழ்வு முகாமில் 37 பேருக்கு கொரோனா!

அகதிகள் மறுவாழ்வு முகாமில் 37 பேருக்கு கொரோனா!

1 minutes read

இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், குறித்த பகுதிக்குள் வேறு நபர்கள் உள்நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணைப்பகுதியில் உள்ள முகாமிலே மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த முகாமில் 145 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இதில் 528 பேர் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் 37 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், அதில் 5 பேர் மாத்திரமே ஓசூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏனையவர்கள் அகதிகள் முகாமிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்தே வெளிநபர்கள் குறித்த பகுதிக்குள் உள்நுழைவதற்கும், குறித்த பகுதிக்குள் வசிப்பவர்கள் வெளியேறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More