செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா தமிழகத்தில் ஊரடங்கு நீடிக்கப்படுமா?

தமிழகத்தில் ஊரடங்கு நீடிக்கப்படுமா?

0 minutes read

தமிழகத்தில் தற்போதைய சூழ்நிலையில் ஊரங்கை தொடர்ந்து நீடிப்பதா? அல்லது தளர்த்துவதா? என்பது தொடர்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை கூட்டமொன்றினை இன்று (சனிக்கிழமை) நடத்தவுள்ளார்.

கொரோனா பரவலைத் தடுப்பதற்கு கடந்த மாதம் முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் தற்போது, தொற்று குறைவடைந்துள்ள 27 மாவட்டங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு எதிர்வரும் 21ஆம் திகதி வரை அமுலில் உள்ளது.

மேலும் தொற்று அதிகமாகவுள்ள 11 மாவட்டங்களில் மாத்திரம் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஊரடங்கு காலம் நிறைவடைவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளமையினால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.

குறித்த ஆலோசனை கூட்டத்தில் ஊரங்கை தொடர்ந்து நீடிப்பதா? அல்லது தளர்த்துவதா? என்பது தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் மருத்துவ நிபுணர்கள், சுகாதாரத் துறை மற்றும் அரச உயர் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.