செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வவுனியாவில் தபால் அலுவலக சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டன!

வவுனியாவில் தபால் அலுவலக சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டன!

0 minutes read

கொரோனா பரவலை கருத்திற்கொண்டு வவுனியா தலைமை தபால் அலுவலகத்தின் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

அந்தவகையில் புதன், வெள்ளி ஆகிய தினங்களில் தபால் நிலையத்தின் அனைத்து செயற்பாடுகளும் முற்றாக நிறுத்தப்படுவதுடன், ஞாயிறு தவிர்ந்த ஏனைய நாட்களில் அனைத்து செயற்பாடுகளும் வழமைபோல இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே புதன், வெள்ளி ஆகிய தினங்களில் வவுனியா தலைமை தபால் அலுவலகத்திற்கு பொதுமக்கள் வருகை தருவதை தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளது.

இதேவேளை, வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் இ.பிரதாபன் மற்றும் அங்கு பணிபுரியும் 2 உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், பிரதேச செயலகத்தில் பணிபுரியும் ஏனைய உத்தியோகத்தர்களிற்கு இன்றையதினம் சுகாதார பிரிவினரால் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.