செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா குஷ்பு வெளியிட்ட புகைப்படங்கள்!

குஷ்பு வெளியிட்ட புகைப்படங்கள்!

1 minutes read

நடிகை குஷ்பு தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

நடிகை குஷ்பு 90-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். இவர் பெயரில் கோவில் கட்டும் அளவிற்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர். வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் கொடிகட்டி பறந்ததை போல தற்போது அரசியலிலும் படு பிசியாக செயல்பட்டு வருகிறார் குஷ்பு.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே தனது உடல் எடையை குறைக்க தீவிரமான பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தார் குஷ்பு. தற்போது அவரின் முயற்சிக்கு பலனாக படு மாடலான லுக்கில் இன்றைய கதாநாயகிகளுக்கு சவால் விடும் அளவிற்கு இளமையான தோற்றத்திற்கு மாறியுள்ளார் குஷ்பு.

தற்போது தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் குஷ்பு பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. எப்போதும் சேலைகளில் வலம் வரும் குஷ்பு, மாடர்ன் உடையில் கடின உழைப்பின் மூலமாக கிடைக்கும் பிரதிபலனின் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்ற கேப்சனோடு புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

குஷ்பு

அவரின் இந்த புகைப்படங்களை பார்த்து பலரும் பாராட்டு தெரிவித்து வரும் வேளையில், இது நீங்களா இல்லை உங்களின் பொண்ணா என சந்தேகமாக கேள்வி கேட்டு வருகின்றனர். குஷ்பு தற்போது சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.